உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வார இறுதி நாட்களையொட்டி சிறப்பு பஸ்களுக்கு ஏற்பாடு

வார இறுதி நாட்களையொட்டி சிறப்பு பஸ்களுக்கு ஏற்பாடு

விழுப்புரம்: விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வார இறுதி நாட்களை யொட்டி சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாளை (7 ம் தேதி) மற்றும் 8,9ம் தேதிகளான வார இறுதி நாட்களிலும், 10ம் தேதி சுபமுகூர்த்த நாளிலும் மக்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிகளவில் பயணிப்பர்.இதையொட்டி, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக நாளை (7ம் தேதி) 165, 8ம் தேதி 200, 9ம் தேதி 95 உட்பட மொத்தம் 460 சிறப்பு பஸ்களை இந்த வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வேலுார், ஓசூர், புதுச்சேரி (இ.சி.ஆர்., வழி) திருவண்ணாமலை ( ஆற்காடு, ஆரணி வழி), திருவண்ணாமலை (காஞ்சிபுரம், வந்தவாசி வழி) ஆகிய ஊர்களுக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கூடுதலாக நாளை (7ம் தேதி) 40, 8ம் தேதி 40 உட்பட மொத்தம் 80 சிறப்பு பஸ்களை இந்த வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் https://www.tnstc.inஇணையதளம் மூலம் முன்பதிவு செய்து இந்த சிறப்பு பஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம்.பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ்களை ஏற்பாடு செய்யவும். பஸ் இயக்க மேற்பார்வை செய்யவும் அதிகாரிகள் பணியமர்த்தியுள்ளதாக, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்