உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குடிக்க பணம் தர மறுப்பு நண்பரை குத்தியவர் கைது

குடிக்க பணம் தர மறுப்பு நண்பரை குத்தியவர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் மது குடிக்க பணம் தர மறுத்த நண்பரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் ராஜகோபால் வீதியைச் சேர்ந்தவர் வெங்கடே சன், 62; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் தனது நண்பரான, விழுப்புரம் பூந்தோட்டம் பாதையைச் சேர்ந்த பாலாஜி, 41; என்பவருடன், பேசிக்கொண்டிருந்தார்.அப்போது, பாலாஜி குடிப்பதற்கு பணம் தருமாறு, வெங்கடேசனிடம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த பாலாஜி, பேனா கத்தியால் வெங்கடேசனை குத்தினார். வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, நேற்று பாலாஜியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை