உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போலீசாருக்கு மிரட்டல் ஆசாமி கைது

போலீசாருக்கு மிரட்டல் ஆசாமி கைது

வானூர்: வானூர் அருகே பொது இடத்தில் போலீசாருக்கு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.வானூர் சப் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையில் போலீசார், ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, கரசானூர் பஸ் நிறுத்தம் அருகே 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது பைக்கை சாலையில் நிறுத்தி விட்டு, அவ்வழியாக சென்ற பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் தகராறு செய்துள்ளார்.இதனை ரோந்து சென்ற போலீசார் கண்டித்துள்ளனர். அதில் ஆத்திரமடைந்த அந்த நபர், போலீஸ்கார்களிடம் வாக்குவாதம் செய்ததோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில், கரசானூரை சேர்ந்த மாணிக்கம் மகன் பிரபாகரன் என்பது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ