உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வழக்கறிஞர் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை

வழக்கறிஞர் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை

திண்டிவனம் : திண்டிவனத்தில், வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டிவனம் அடுத்த தென்கோடிப்பாக்கம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 48; அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 60; இருவருக்குமிடையே சொத்து தகராறில் முன் விரோதம் உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் மயிலம் சாலையில் தள்ளுவண்டி டிபன் கடையில் சாப்பிடுவதற்காக ஏழுமலை மற்றும் அவரது உறவினர் பிரவீன்குமார், 24; என்பவரும் நின்று கொண்டிருந்தனர்.அப்போது, அங்கு வந்த ராஜேந்திரனுக்கும், ஏழுமலைக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராஜேந்திரன் தாக்கப்பட்டார்.இதனைப் பார்த்த கிடங்கல் (2) பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜசேகர், 44; தாக்குதலை தடுக்க முயன்றார். இதில், ராஜசேகரனும் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் காயமடைந்த ராஜேந்திரன், ராஜசேகர் ஆகியோரை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில், ஏழுமலை, பிரவீன்குமார் ஆகியோர் மீது திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி