உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உதவி செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு

உதவி செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு

மரக்காணம் : மரக்காணம் அடுத்த முருக்கேரி துணை மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.திண்டிவனம் கோட்ட வளாகத்தில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கிழக்கு அலுவலகம் இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் முருக்கேரி, மரக்காணம், அனுமந்தை, பிரம்மதேசம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களைச் சேர்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இதனால் முருக்கேரி, மரக்காணம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மின் தொடர்பான புகார்கள் மற்றும் பணிகளுக்கு திண்டிவனம் செல்ல வேண்டிய நிலை இருந்ததால், பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.மின் நுகர்வோர்கள் நலன் கருதி திண்டிவனத்தில் இருந்த உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முருக்கேரி துணை நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதற்கான திறப்பு விழாவிற்கு, விழுப்புரம் மண்டல தலைமை பொறியாளர் சதாசிவம், மேற்பார்வை பொறியாளர் லட்சுமி, கோட்டபொறியாளர் சிவசங்கரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ