உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் ஏ.டி.ஜி.பி., தலைமையில் ஆய்வுக்கூட்டம்

விழுப்புரத்தில் ஏ.டி.ஜி.பி., தலைமையில் ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் சரகத்தில் காவல்துறை நிர்வாகப்பணிகள் குறித்து, ஏ.டி.ஜி.பி., தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.விழுப்புரம் எஸ்.பி., அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை நடந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழக ஏ.டி.ஜி.பி., (நிதி நிர்வாகம்) டேவிட்சன் தேவாசிர்வாதம் தலைமை தாங்கினார். விழுப்புரம் காவல் சரகத்தில், காவல்துறை நிர்வாகப் பணிகள் குறித்தும், திட்டப் பணிகள், அதற்கான செலவினங்கள், தேவைகள் குறித்தும், அதிகாரிகளிடம் கேட்டறிந்து, ஆய்வு செய்து ஏ.டி.ஜி.பி., ஆலோசனை வழங்கினார். விழுப்புரம் எஸ்.பி., தீபக்சிவாச், கடலுார் எஸ்.பி., ராஜாராம், கள்ளக்குறிச்சி எஸ்.பி., சமய்சிங் மீனா மற்றும் மூன்று மாவட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ