உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

திண்டிவனம்: திண்டிவனத்தில், தமிழ்ச்சங்கம், வேதவள்ளி அம்மாள் அறக்கட்டளை சார்பில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.விழாவிற்கு, திண்டிவனம் தமிழ்ச்சங்க தலைவர் துரை ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழுமலை வரவேற்றார். வேதவள்ளி அம்மாள் அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம், பொருளாளர் பாலாஜி வெங்கடேசன், பேராசிரியர் பிரபா கல்விமணி, மயிலம் கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர்.விழாவில், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் சிவசுப்ரமணியன், தனியார் மெட்ரிக் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) தனசுப்ராயன் ஆகியோர் நினைவுப் பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.விழாவில் பங்கேற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு எழுத்தாளர் பெரியண்ணன், ஞானஜோதி ஆகியோர் பரிசு வழங்கினர்.நிகழ்ச்சியில், அரிமா சங்க மாவட்ட தலைவர் சுந்தரம், சாய்நாத் பிரபாகரன், வழக்கறிஞர் பூபால், மதிவாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.தமிழ்ச்சங்க பொருளாளர் ஜானகிராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை