உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பால சித்தர் மகா  குருபூஜை  விழா

பால சித்தர் மகா  குருபூஜை  விழா

மயிலம்: மயிலம் பொம்மபுர ஆதீன திருமடத்தில் பாலசித்தர் மகா குருபூஜை விழா நடந்தது.விழாவிற்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி பேசினார். திருமடத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் வரவேற்றார்.விழாவில் கேரளா மாநிலம், ஆலப்புழாவில் உள்ள ஸ்ரீ சிவ பிரபாகர சித்த ஆசிரம தலைவர் ரமாதேவி, மதுராந்தகம் திருக்குறள் பீட நிர்வாகி பழனி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மெய்யியல் துறை தலைவர் நல்லசிவம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.தொடர்ந்து, சங்கு கன்ன பாலசித்தர் இதழ் வெளியீட்டு விழா நடந்தது.விழாவில் மயிலம் தமிழ்க் கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு, ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், ஊராட்சி தலைவர் சிவக்குமார், செயலாளர் சங்கர் உட்பட கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி