உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாழை மரம் விழுந்து தொழிலாளி பலி

வாழை மரம் விழுந்து தொழிலாளி பலி

விழுப்புரம்: வளவனுார் அருகே மரம் விழுந்து கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.வளவனுார் அருகே கொங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசபெருமாள்,54; கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் தனது வீட்டின் வாழை மரத்தை வெட்டிய போது, அந்த மரம் வெங்கடேச பெருமாளின் கழுத்து பகுதியில் விழுந்தது. இதனால் பலத்த காயமடந்த அவர், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ