மேலும் செய்திகள்
பைக் மோதி முதியவர் பலி
02-Sep-2024
திண்டிவனம்: திண்டிவனம் அருகே பைக் மோதி ஒருவர் இறந்தார்.திண்டிவனம் அடுத்த கீழ்சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பராயலு, 54; இவர் நேற்று முன்தினம் இரவு, உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டவர், பைக்கில் திண்டிவனம் - ஆவணிப்பூர் சாலையில் வீடு திரும்பினார்.இரவு 11:45 மணியளவில், திண்டிவனம் நோக்கி வந்த மற்றொரு பைக், சுப்பராயலு ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
02-Sep-2024