மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
2 hour(s) ago
தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
2 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட இளைஞர் காங்., சார்பில், ரத்த தான முகாம் நடந்தது.ராகுலின் 54வது பிறந்த நாளையொட்டி இளைஞர் காங்., மாநில தலைவர் லெனின்பிரசாத், விழுப்புரம் மத்திய மாவட்ட காங்., தலைவர் சீனிவாசகுமார் மேற்பார்வையில், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் நடந்த முகாமிற்கு, இளைஞர் காங்., மாவட்ட தலைவர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். துணை தலைவர் சந்தானகிருஷ்ணன் வரவேற்றார். நகர காங்., தலைவர் செல்வராஜ் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் வேலு, தொகுதி தலைவர் பிரபாகரன், எஸ்.சி., பிரிவு மாவட்ட தலைவர் சேகர், பொருளாளர் புஷ்பராஜ், காங்., நகர தலைவர் பாரிபாபு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தன்சிங், செயலாளர் முத்து முன்னிலை வகித்தனர். வட்டார பொறுப்பாளர் ஆறுமுகம், இளைஞர் காங்., தொகுதி தலைவர் ரமணன், பொதுக்குழு வினோத், மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.இளைஞர் காங்., பொதுச் செயலாளர் ரவிக்குமார் நன்றி கூறினார்.
2 hour(s) ago
2 hour(s) ago