உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இ.எஸ்.கல்லூரியில் ரத்ததான முகாம்

இ.எஸ்.கல்லூரியில் ரத்ததான முகாம்

விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்.கலை அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சுருள் சங்கம், செஞ்சிலுவைச் சங்கம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.கல்லூரி முதல்வர் முரளிதரன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் பிரியாபத்மாசினி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் விஜயா, செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் திருமாவளவன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலர் சிவகங்கா, எச்.டி.எப்.சி., வங்கி கிளை மேலாளர் வெங்கடசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைத்தனர்.முகாமில், ரத்த தானம் செய்வதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம்குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் ரத்த தானம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ