உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஸ்ரீரங்க பூபதி செவிலியர் கல்லுாரியில் ரத்த அழுத்த தினம்

ஸ்ரீரங்க பூபதி செவிலியர் கல்லுாரியில் ரத்த அழுத்த தினம்

செஞ்சி : சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்ரீரங்க பூபதி நர்சிங் கல்லுாரி சார்பில் உலக ரத்த அழுத்த தின நிகழ்ச்சி நடந்தது.செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி நர்சிங் கல்லுாரி சார்பில் உலக ரத்த அழுத்த தின நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் பவித்ரா தலைமை தாங்கினார். ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவன செயலாளர் ஸ்ரீபதி முகாமை துவக்கி வைத்தார். இதில் பொது மக்களுக்கு ரத்த அழுத்தம் பரிசோதித்து ஆலோசனை வழங்கினர். செவிலியர் கல்லுாரி முதல்வர் மாலதி, உதவி பேராசிரியர்கள் சவுந்தர்யா, அருணா, லாவன்யா, ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், பணியாளர்கள், பயிற்சி செயலியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி