உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு

விழுப்புரம்: விழுப்புரம், வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி புவனேஸ்வரி, 62; இவர், கடந்த 12ம் தேதி மாலை 5:30 மணிக்கு, விழுப்புரம் பூந்தோட்டம், ரங்கநாதன் தெருவில் வசித்த வரும் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.நேற்று காலை 11:30 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 50 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.இது குறித்து, புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ