மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
3 hour(s) ago
தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
3 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, ஜமாபந்தி முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறுவது ரத்து செய்யப்பட்டுள்ளது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டு 1433ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாய முகாம், மாவட்டத்தில் அனைத்து தாலுகாக்களிலும் கடந்த 14ம் தேதி முதல் துவங்கி நடைபெற இருந்தது.இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு, இந்திய தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள், விழுப்புரம் மாவட்டம் முழுமைக்கும் நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளது.இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய்த் தீர்வாயம் நடைபெறும் நாட்களில், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் ஏதும் பெறப்படாது.வருவாய்த் தீர்வாய நாட்களில், கிராம கணக்குகள் மட்டும், வருவாய்த் தீர்வாய அலுவலர்களால் சரிபார்க்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
3 hour(s) ago
3 hour(s) ago