உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஜன்னல் கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு 

ஜன்னல் கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு 

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பொது கழிவறை ஜன்னல் கண்ணாடியை உடைத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகேசன், 65; இவர், அதே பகுதியில் ஒப்பந்தம் எடுத்து, அரசு பொது கழிவறை வளாகம் கட்டியுள்ளார்.அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் சுரேஷ், 26; இவர், கடந்த 3ம் தேதி, மது போதையில் வந்து அந்த கழிவறை வளாகத்தின் மீது கல் வீசி தாக்கினார். அப்போது, ஜன்னல் வென்டிலேட்டர் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதையறிந்த அழகேசன், தட்டிக்கேட்டுள்ளார். அதற்கு அவரை சுரேஷ், திட்டி, தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அழகேசன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், சுரேஷ் மீது வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ