உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணல் கடத்தியவர் மீது வழக்கு

மணல் கடத்தியவர் மீது வழக்கு

விழுப்புரம், - விழுப்புரம் அருகே ஆற்று மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.காணை சப் இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் லட்சுமிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.உடன் லாரியை ஓட்டி வந்த குயவன்காடுவெட்டி பகுதியைச் சேர்ந்த ராஜாமணி மகன் வீரமணி, 30; மற்றும் வாகனத்தின் உரிமையாளர் பழனிவேல் மகன் பன்னீர், 35; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து மினி லாரியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை