உள்ளூர் செய்திகள்

சாகை வார்த்தல்

மயிலம் : மயிலம் அடுத்த செண்டூர் கங்கையம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவில் சாகை வார்த்தல் நடந்தது.அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட பூங்கரகத்தை முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர். 11:00 மணிக்கு அம்மனுக்கு பால், சந்தனம், தேன், பன்னீர் நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது.இரவு 8:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ