குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, பி.டி.ஓ., பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல ஆலோசகர் முருகன் குழந்தைகள் உரிமைகள், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்பு. குழந்தை திருமண தடுப்புச் சட்டம், கட்டாயக் கல்விச் சட்டம் குறித்தும், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை குறித்தும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கினார்.கூட்டத்தில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகப் பணியாளர்கள், மருத்துவத்துறை செவிலியர்கள், ஊராட்சி தலைவர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.குழந்தைகளுடைய பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.