உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், : விழுப்புரத்தில் இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யூ.,) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., செயலாளர் மூர்த்தி, துணைத் தலைவர் குமார் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், காணாமல் போன ஆன்லைன் பதிவுகளை மீட்டெடுத்து தொழிலாளர் நலவாரிய செயல்பாடுகளை முறைபடுத்த வேண்டும். விழுப்புரம் நலவாரிய கட்டடத்தை தொழிலாளர்கள் நலனுக்காக பெருந்திட்ட வளாகத்திற்குள் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.டாஸ்மாக் ஊழியர் சங்க செயலாளர் கணபதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை