உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொது இடத்தில் மோதல் 2 போலீசார் சஸ்பெண்ட்

பொது இடத்தில் மோதல் 2 போலீசார் சஸ்பெண்ட்

விழுப்புரம்:பொது இடத்தில் மோதிக் கொண்ட இரு போலீஸ்காரர்களை 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.விழுப்புரம் ஆயுதப்படையில் போலீசாராக பணிபுரிபவர்கள் செல்வமணி, பாலாஜி. இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இருவரும், விழுப்புரம் நான்கு முனை சிக்னல் சந்திப்பில், பைக்கில் மோதி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.இதையடுத்து, ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட இருவரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., தீபக்சிவாச் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை