மேலும் செய்திகள்
குழந்தைகள் பாதுகாப்பு ஆய்வு கூட்டம்
10-Aug-2024
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மூன்றாவது செயற்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் பழனி, தலைமை தாங்கி கூறியதாவது,சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் சார்ந்த அறிவுரை மற்றும் பாலின விகிதம் குறைவாகவுள்ள வட்டாரங்களில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இது தொடர்பாக அனைத்து துறைகளும் வரும் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் திட்டம் சார்ந்த நிகழ்வுகளை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும். திட்டம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உயர்த்த தற்போது மருத்துவமனைகளில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லுாரி மற்றும் பொதுமக்களிடம் குழந்தை திருமணம் நடப்பதை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. முதல்வரின் இரு பெண் குழந்தைகள் மட்டும் உள்ள குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்பீட்டு பத்திரம் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.இந்த கூட்டத்தில், மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், ஏ.டி.எஸ்.பி., ஸ்ரீதர், துணை ஆட்சியர் (பயிற்சி) பிரேமி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
10-Aug-2024