உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்லுாரி மாணவர் போக்சோவில் கைது

கல்லுாரி மாணவர் போக்சோவில் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த கல்லுாரி மாணவரை போலீசார் 'போக்சோ' வழக்கில் கைது செய்தனர்.விழுப்புரம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிபாலன் மகன் ராகுல், 21; அரசு கல்லுாரியில் பி.ஏ., வரலாறு 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், 17 வயது சிறுமியிடம் பழகியுள்ளார். இவர், அண்ணன் முறையென தெரியவந்ததால், அந்த சிறுமி ராகுலுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.இந்நிலையில், தனது வீட்டருகே இருந்த சிறுமியை நேற்று முன்தினம் பார்த்த ராகுல், மீண்டும் தன்னோடு பேசிப் பழக வேண்டும் என வற்புறுத்தியதோடு பாலியல் தொந்தரவு செய்து தாக்கியுள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில், ராகுல் மீது விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராகுலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி