உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு மகளிர் பள்ளியில் கருத்து கேட்பு கூட்டம்

அரசு மகளிர் பள்ளியில் கருத்து கேட்பு கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில் சத்துணவு திட்டம் குறித்த சமூக தணிக்கைக்கான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 22ம் தேதி முதல் நாளை (26ம் தேதி) வரை எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டம் குறித்த சமூக தணிக்கை நடக்கிறது. இதையொட்டி, நேற்று இந்த பள்ளியின் மேலாண்மை குழுவிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சசிகலா முன்னிலையில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் கோலியனுார் வட்டார சமூக தணிக்கை அலுவலர் குமார் தலைமையிலான தணிக்கை குழுவினர் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ