உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நகராட்சி கமிஷனரிடம் கவுன்சிலர் கோரிக்கை மனு

நகராட்சி கமிஷனரிடம் கவுன்சிலர் கோரிக்கை மனு

விழுப்புரம்: விழுப்புரம் வடக்குத் தெரு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.விழுப்புரம் நகராட்சி 9வது வார்டு கவுன்சிலர் ராதிகா தலைமையில், மேல்தெரு, வடக்குத் தெரு பகுதி மக்கள், கமிஷனர் ரமேஷிடம் அளித்த மனு:விழுப்புரம் நகராட்சி 9வது வார்டு பகுதியில் உள்ள மேல்தெரு, வடக்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளில், சாலை வசதி, வடிகால் வாய்க்கால் வசதியை மேம்படுத்த வேண்டும். இது பற்றி பொதுமக்கள் சார்பில், நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.மேலும், நகர் மன்ற கூட்டங்களிலும், எங்களது வார்டு கவுன்சிலர் பலமுறை கோரிக்கைளை வலியுறுத்தி வந்துள்ளார். இருப்பினும் எங்கள் பகுதியில் ைஹமாஸ் விளக்கு வசதி, கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்பு, சாலை வசதிகள் செய்து தரப்படவில்லை. அடிப்படை வசதிகளை செய்து தர, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.ைஹதர் ெஷரீப், செந்தில், பிரகாஷ், கார்த்திக், ரமேஷ், பிரபு உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை