| ADDED : ஆக 19, 2024 12:09 AM
விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரியில், இளநிலை பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 22ம் தேதி நடக்கிறது.கல்லுாரி முதல்வர் சிவக்குமார் செய்திக்குறிப்பு:விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில், இந்த கல்வியாண்டின் மாணவர்கள் சேர்க்கையின் தொடர்ச்சியாக, காலியாக உள்ள சேர்க்கை இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 22ம் தேதி காலை 10:00 மணிக்கு தொடங்கி நடக்கிறது.தமிழ் பாடத்தில் 80 மதிப்பெண் மற்றும் அதற்கும் மேலான மதிப்பெண் பெற்றவர்களுக்கு, பி.ஏ., ஆங்கிலம் படிப்புக்கு பகல் 12:00 மணி முதல், ஆங்கில பாடத்தில் 50 மதிப்பெண் மற்றும் அதற்கும் மேலாக பெற்றவர்களுக்கும் நடக்கிறது.தொடர்ந்த 23ம் தேதி பி.ஏ., வரலாறு, பொருளியல் படிப்புகளுக்கு காலை 10:00 மணி முதல் (தனி அறிவியல், அனைத்து தொழில் நுட்ப பிரிவு பாடங்கள்) கட் ஆப் மதிப்பெண் 239 முதல் 220 மதிப்பெண் பெற்றவர்களுக்கும், பி.ஏ., வரலாறு, பொருளியல் பாடங்களுக்கு மதியம் 12:00 மணி முதல் நடக்கிறது.கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்கள், கட்டணம், ஆவணங்களுடன் வரவேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.