| ADDED : ஆக 15, 2024 05:47 AM
விழுப்புரம்: திண்டிவனம் தாலுகா கூட்டேரிப்பட்டு அடுத்த கொடிமா கிராமத்தைச் சேர்ந்த சந்திரகாசன் மகன் விஸ்வநாதன்,40; கள்ளச்சாராய வியாபாரி. இவர், கடந்த ஜூன் 29ம் தேதி, தனது வீட்டின் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திண்டிவனம் போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வரும் இவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில், எஸ்.பி., தீபக்சிவாஜ் பரிந்துரையின் பேரில், கலெக்டர் பழனி, அவரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார். இதனையடுத்து, திண்டிவனம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், விஸ்வநாதனை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.