உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மூதாட்டி கொலை வழக்கு வாலிபருக்கு ஆயுள் விழுப்புரம் கோர்ட் தீர்ப்பு

மூதாட்டி கொலை வழக்கு வாலிபருக்கு ஆயுள் விழுப்புரம் கோர்ட் தீர்ப்பு

விழுப்புரம் : கடனை திருப்பி கேட்ட மூதாட்டியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.விழுப்புரம் அடுத்த வி.அகரம் காலனியை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மனைவி செல்லபாக்கியம் (எ) செல்லபாங்கி,65; இவரிடம், அதே கிராமத்தை சேர்ந்த மதுரைவீரன் மகன் ராஜேஷ்,20; கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.2,000 கடன் வாங்கினார். அதனை திருப்பி தராத நிலையில் அதே ஆண்டு பிப்.13ம் தேதி மீண்டும் செல்லபாங்கியிடம் ரூ.500 கடன் கேட்டார். கடன் தர மறுத்த செல்லபாங்கி, ராஜேஷ் மற்றும் அவரது தாயையும் தரக்குறைவாக திட்டினார். மேலும், அன்று இரவு அங்குள்ள பெட்டிக்கடை அருகே நின்றிருந்த ராஜேஷிடம், மீண்டும் பணத்தை கேட்டு திட்டினார்.ஆத்திரமடைந்த ராஜேஷ், பணத்தை தருவதாக செல்லபாங்கியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று, கழுத்தை நெரித்து கொலை செய்து வீட்டின் கழிவறை தொட்டியில் போட்டு மறைத்தார்.இதுகுறித்து செல்லபாங்கியின் மகன் பழனிவேல் அளித்த புகாரின் பேரில் வளவனுார் போலீசார், ராஜேஷை கைது செய்து, விழுப்புரம் மகிளா விரைவு கோர்ட்டில் கொலை வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசன், ராஜேஷிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். ராஜேஷ், கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை