மேலும் செய்திகள்
மகள் மாயம் தந்தை புகார்
15-Aug-2024
விழுப்புரம்: விழுப்புரத்தில் மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் மகள் பிரியதர்ஷினி, 29; விழுப்புரம் நேருஜி ரோட்டில் உள்ள துணிக்கடையில் 3 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 5ம் தேதி வழக்கம் போல் வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.பெண்ணின் தாய் விஜயா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
15-Aug-2024