மேலும் செய்திகள்
அமைச்சர் மீதான குவாரி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
15-Feb-2025
விழுப்புரம் : முன்னாள் அமைச்சர் சண்முகம் மீதான அவதுாறு வழக்கு விசாரணை வரும் மார்ச் 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில், அ.தி.மு.க., சார்பில், ஆரோவில் பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி, கோட்டக்குப்பத்தில் மே 1ம் தேதி, கோலியனுாரில் செப்டம்பர் 16ம் தேதி பொது கூட்டங்களும், விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் ஜூலை 20ம் தேதி ஆர்ப்பாட்டமும் நடந்தது.இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சண்முகம், தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் அவதுாறாக பேசியதாக, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியம், தனித்தனியே வழக்கு தொடர்ந்தார்.இந்த நான்கு வழக்குகளும், நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சண்முகம் ஆஜராகவில்லை. அவர் சார்பில், அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆஜராகி, விளக்கமளித்தனர்.அதில், ஆரோவில், கோட்டக்குப்பம் வழக்குகளை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்டில் மனுதாக்கல் செய்துள்ளதால், அதன் மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும். விழுப்புரம் பழைய பஸ் நிலைய வழக்கில், சண்முகம் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.மேலும், கோலியனுார் வழக்கில், முறையாக விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறி, அதற்கான நகலை வழக்கறிஞர்கள் சமர்பித்தனர். விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) ராஜசிம்மவர்மன் வரும் மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
15-Feb-2025