| ADDED : ஜூன் 16, 2024 10:35 PM
விழுப்புரம் : காஷ்மீர் யாத்திரைக்குச் செல்லும் இந்து யாத்திரிகர்களுக்கு, மத்திய அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென வி.எச்.பி., கோரிக்கை விடுத்துள்ளது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், வி.எச்.பி., சார்பில் அதன் மாவட்ட அமைப்பாளர் நாராயணன் தலைமையில், செயலாளர் பாபு, தலைவர் ராமமூர்த்தி, மகளிர் அணி புஷ்பா, நகர தலைவர் சுந்தரேசன் உள்ளிட்டோர் அளித்த மனு:ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரியாசில் அமைதியாக புனித பயணம் சென்ற இந்து யாத்திரிகர்கள் மீது, பயங்கரவாதிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அங்கு செல்லும் தமிழக இந்து யாத்திரிகர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு செல்லும் ஒவ்வொரு இந்து யாத்திரிகர்களுக்கும், தேவையான பாதுகாப்பை மத்திய அரசு வழங்க வேண்டும்.யூனியன் பிரதேசத்தில், மறைந்திருந்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்தும், கொல்லப்பட்ட இந்துக்களுக்கு நீதி வழங்க வேண்டும். இது மற்ற பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கையாக அமையும்.இறந்த இந்து யாத்திரிகர்கள் குடும்பம் துக்கத்தில் இருந்து மீளவும், காயமடைந்தவர்கள் குணமடையவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். பயங்கரவாதத்தால் இந்துக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலைகளிருந்து காத்து, இந்துக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தித் தர மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.