உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பழைய நகராட்சி அலுவலக சுற்றுச்சுவர் இடிப்பு; திண்டிவனத்தில் போக்குவரத்து நெரிசல்

பழைய நகராட்சி அலுவலக சுற்றுச்சுவர் இடிப்பு; திண்டிவனத்தில் போக்குவரத்து நெரிசல்

திண்டிவனம் : திண்டிவனம் பழைய நகராட்சி அலுவலகத்தின் இடிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.திண்டிவனம் காந்தி சிலை பின்புறம் உள்ள பழைய நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்திற்கான அலுவலகம் செயல்பட்டு வருகிறது.நகராட்சி அலுவலகம் செயல்பட்ட போது, அலுவலகத்தின் நுழைவாயில் பகுதியை ஆட்டோக்களை நிறுத்தி ஸ்டாண்டாக பயன்படுத்தி வந்தனர். இதனால் நுழைவுவாயில் அருகே வி வடிவில் சுற்றுச்சுவர் எழுப்பினர்.தற்போது அந்த சுவற்றின் ஒரு பகுதி, நேற்று பொக்லைன் மூலம் நேற்று இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மீண்டும் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி நகராட்சி அதிகாரியிடம் கேட்ட போது, சுவரை இடிக்க யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை என்றனர்.காந்தி சிலை அருகே எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ள நிலையில், தற்போது நகராட்சி சுவர் அத்துமீறி அகற்றி அந்தப்பகுதியில் ஆட்டோக்களை நிறுத்துவதால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.எஸ்.பி., தீபக் சிவாச் காந்தி சிலை பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ