உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., மாவட்ட செயலர் நியமனம் விழுப்புரத்தில் இனிப்பு வழங்கல்

தி.மு.க., மாவட்ட செயலர் நியமனம் விழுப்புரத்தில் இனிப்பு வழங்கல்

விழுப்புரம் : விழுப்புரம் தி.மு.க., தெற்கு மாவட்ட செயலராக டாக்டர் கவுதமசிகாமணி நியமிக்கப்பட்டதை வரவேற்று, அக்கட்சியினர் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.விழுப்புரம் தி.மு.க., தெற்கு மாவட்ட பொருப்பாளராக, அமைச்சர் பொன்முடியின் மகனான முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணியை, தி.மு.க., தலைமை நேற்று காலை அறிவித்தது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட தி.மு.க.,வினர், விழுப்புரம் நகர தி.மு.க., அலுவலகத்தில் இருந்து, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் தலைமையில் ஊர்வலமாக காந்தி சிலை வரை சென்று, அங்கு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.மாவட்ட துணை செயலர் இளந்திரையன், நகர செயலாளர் சக்கரை, மாவட்ட மாணவரணி ஸ்ரீவிேனாத், நகர இளைஞரணி மணிகண்டன், ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி, நகர மன்ற துணை தலைவர் சித்திக்அலி, நகர நிர்வாகிகள் இளங்கோ, தொ.மு.ச., நிர்வாகிகள் சேகர், வாலிபால் மணி, பிரபாதண்டபாணி, பிரபாதனசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி