உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொதுமக்களுக்கு தி.மு.க., வினர் இனிப்பு வழங்கல்

பொதுமக்களுக்கு தி.மு.க., வினர் இனிப்பு வழங்கல்

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்தில் முகையூர் ஒன்றிய தி.மு.க சார்பில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். தி.மு.க.,வின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக கவுதமசிகாமணி நியமிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க.,தலைமை நேற்று அறிவித்தது. இதனையடுத்து தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்தில் முகையூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன்,நிர்வாகி ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் தி.மு.க.,வினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.இதில் முகையூர் ஊராட்சித்தலைவர் லுாயிஸ் கண்டாச்சிபுரம் கிளைக்கழக நிர்வாகிகள்இளஞ்செழியன்,தேவசேனாதிபதி,நடராஜன்,ஜீவானந்தம்,செல்பெருமாள்,சிவகுரு,தணிகைவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை