உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தினமலர் - பட்டம் இதழ் மாணவர்களுக்கு வழங்கல்

தினமலர் - பட்டம் இதழ் மாணவர்களுக்கு வழங்கல்

மயிலம்: மயிலம் சிவப்பிரகாசர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வீரப்பன் வரவேற்றார். பட்டம் இதழை வழங்கி மயிலம் பொம்மபுர ஆதீன திருமடத்தின் நிர்வாகி, பள்ளி தாளாளர் விஸ்வநாதன் பட்டம் இதழை வழங்கி பேசுகையில், ''தினமலர் - பட்டம்' இதழில் பொது அறிவு மற்றும் பாடம் சார்ந்த பல்வேறு சந்தேகங்களுக்கு எளிய முறையில் புரியும் படி எடுத்துரைக்கப்படுகிறது. படித்து முடித்தவுடன் போட்டித் தேர்வுகள் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இது உதவியாக இருக்கும்' என்றார்.ஊராட்சி செயலாளர் சங்கர், பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியரும் உட்பட பலர் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை