மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
2 hour(s) ago
தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
2 hour(s) ago
வானுார்: திருச்சிற்றம்பலம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதைகளின் இருப்பு விபரத்தை, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.வானுார் வட்டாரத்தில் பரங்கினி, கிளியனுார் மற்றும் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு தரமான விதைகள் மற்றும் இடுபொருட்கள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இங்கு ஆய்வு மேற்கொண்ட இணை இயக்குனர் சீனிவாசன், முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட பசுந்தாள் உர சனப்பை விதைகளின் இருப்பு மற்றும் தரத்தினை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உடனடியாக விதைகளை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.மேலும், வரும் ஆடிப்பட்டத்திற்கு ஏற்ப நெல் விதைகள் சி.ஆர்.1009 சப்-1 மற்றும் மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி இருப்பு உள்ளதை விவசாயிகளுக்கு உடன் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.விவசாயிகள் விதைகளை வாங்கும் போது வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பில் உள்ள உயிர் உரங்கள், நுணணுாட்ட உரங்கள் மற்றும் உயர்ரக காரணிகளை அதிகளவில் பயன்படுத்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.ஆய்வின் போது, வானுார் வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ், துணை வேளாண் அலுவலர் செந்தில்குமார், உதவி விதை அலுவலர் மோகன் குமார், உதவி வேளாண் அலுவலர்கள் ரேகா, ஜெயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago