உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., - வி.சி., நிர்வாகிகள் காணொலியில் ஆலோசனை

தி.மு.க., - வி.சி., நிர்வாகிகள் காணொலியில் ஆலோசனை

விழுப்புரம் : விழுப்புரம் தொகுதி ஓட்டு எண்ணும் மைய முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை 4ம் தேதி நடக்கிறது. இதையொட்டி ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்கும், தி.மு.க., முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், நேற்று காலை வீடியோ கான்பரன்ஸ் மூலம், அக்கட்சித் தலைமை சார்பில் நடந்தது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து நடந்த கூட்டத்திற்கு, தி.மு.க., அமைப்புச் செயலாளர் பாரதி தலைமை தாங்கி, ஓட்டு எண்ணிக்கை நடைமுறைகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து சட்டத்துறைச் செயலாளர் இளங்கோ எம்.பி., ஓட்டு எண்ணிக்கையின் போது தலைமை முகவர்கள், முகவர்களுக்கான பணிகளை விளக்கினார்.விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் கவுதமசிகாமணி எம்.பி., விழுப்புரம் தொகுதி வி.சி., வேட்பாளர் ரவிக்குமார், லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் மற்றும் விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி, வானுார் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை