உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., வெற்றி: இனிப்பு வழங்கல் 

தி.மு.க., வெற்றி: இனிப்பு வழங்கல் 

திண்டிவனம்: தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றதையொட்டி, அக்கட்சியினர், திண்டிவனத்தில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.தமிழகம், புதுச்சேரி உட்பட 40 இடங்களிலும் லோக்சபா தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.இதையொட்டி கட்சியின் செயற்குழு உறுப்பினர் கவுன்சிலர் சின்னசாமி தலைமையில் திண்டிவனத்தில் நேற்று மாலை பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், கவுன்சிலர்கள் ரேகா நந்தகுமார், ரேணுகா இளங்கோவன், லதா சாரங்கபாணி, சின்ன ராஜேந்திரன், அரும்பு குணசேகரன், மாவட்ட பிரதிநிதி முருகன், ஷாகுல் அமீது, எல்.ஐ.சி., ராஜேஷ், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், தினேஷ்குமார், சரவணன், சுந்தரமூர்த்தி, மோகன், நத்தர்பாஷா, பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை