| ADDED : ஆக 18, 2024 04:29 AM
விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லுாரியில் முதுநிலை பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து நேற்று காலை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம், மருத்துவ மாணவர் கூட்டமைப்பு, இளம் மருத்துவர் கூட்டமைப்பு சார்பில் டாக்டர்கள் புறநோயாளிகள் சிகிச்சையை புறகணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் சம்பத், செயலாளர் வினோத் குமார், இணைச் செயலாளர் அப்துல் ஹக்கீம், பொருளாளர் பிரகாஷ், இந்திய மருத்துவ சங்க மாவட்ட தலைவர் தங்கராஜ், செயலாளர் சவுந்தர்ராஜன், மாநில நர்சிங்ேஹாம் போர்டு பொருளாளர் திருமாவளவன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், பெண் டாக்டர் கொலையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மத்திய அரசு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.