உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நன்கொடை வசூல் புகார் எதிரொலி அரசு பள்ளியில் சி.இ.ஓ., ஆய்வு

நன்கொடை வசூல் புகார் எதிரொலி அரசு பள்ளியில் சி.இ.ஓ., ஆய்வு

கண்டமங்கலம், : கண்டமங்கலம் வள்ள லார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலிப்பதாக எழுந்த புகார் காரணமாக சி.இ.ஓ., திடீர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். சமீபத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையும் மற்றும் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.இந்நிலையில் பள்ளி தலைமையாசிரியர் சேவியர் சந்திரகுமார், மாணவர் சேர்க்கைக்கு, பெற்றோர்களிடம் குடத்தை உண்டியலாக்கி நன்கொடை வசூலிப்பதாக சி.இ.ஓ., அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது.அதன்பேரில், விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் நேற்று மாலை பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, விசாரணை மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Dharmavaan
ஜூன் 02, 2024 04:00

கிருஸ்துவர்கள் இந்து பெயரை முழுதுமோ,paguthiyaagavo,jaathi பெயர்தான் வைத்திக்கொள்ள தடை சட்டம் வேண்டும் இது ஹிந்துக்களை/அரசை ஏமாற்றும் செயல்


Dharmavaan
ஜூன் 02, 2024 03:58

கிருஸ்துவன் தசம பாக புத்தி இதில் தெரிகிறது விளைவு என்ன சொல்லவில்லை


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை