மேலும் செய்திகள்
போதை ஆசாமி துாக்கு போட்டு தற்கொலை
2 hour(s) ago
விழுப்புரம் : விழுப்புரத்தில் லாரி-மினி வேன் மோதிக்கொண்ட விபத்தில், மினி வேன் டிரைவர் படுகாயமடைந்தார்.விழுப்புரம் அடுத்த மரகதபுரம் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் சதீஷ்குமார்,25; இவர், மினி லோடு கேரியர் வேன் ஓட்டி வருகிறார்.இவர், கடந்த 24ம் தேதி, விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை சந்திப்பு மேம்பாலம் அருகே, திருக்கோவிலூர் நோக்கி, தனது மினி வேனில் சென்றார். அப்போது, ஏதிரே வந்த லாரி, மினி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.அதில், டிரைவர் சதீஷ்குமார் பலத்த காயமடைந்தார். அவர், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 hour(s) ago