| ADDED : ஜூலை 14, 2024 11:07 PM
செஞ்சி: செஞ்சி அட்வகேட் அசோசியேஷன் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.செஞ்சி அட்வகேட் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. மூத்த வழக்கறிஞர்கள் ஆத்மலிங்கம், வெங்கடேசன், ராஜாராம் ஆகியோர் தேர்தலை நடத்தினர்.இதில் தலைவராக கலியமூர்த்தி, செயலாளராக ஆறுமுகம், பொருளாளராக மோகன்குமார், துணைத் தலைவராக ராஜசேகரன், துணைச் செயலாளராக சம்பத், நுாலகராக மணிமாறன், ஆடிட்டராக சுதன், ஐ.டி., விங் பொறுப்பாளராக முத்துராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு சங்க உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.