உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி விழுப்புரத்தில் நுழைவுத் தேர்வு

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி விழுப்புரத்தில் நுழைவுத் தேர்வு

விழுப்புரம்:மத்திய அரசின் போட்டி தேர்வுக்கு, நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி அளிப்பதற்கான நுழைவு தேர்வு விழுப்புரத்தில் நடந்தது.தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தில், படித்த இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க தனி பிரிவு தொடங்கி, அதன் மூலம் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளது.அதன்படி, ரயில்வே, வங்கிப் பணி ஆகிய தேர்வுகளுக்காக, தேர்ந்தெடுக்கப்படும் 1,000 மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படுகிறது.இதற்காக, தமிழகம் முழுதும், வங்கி பணிகள், ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுத்தேர்வு, மாவட்ட தலைநகரங்களில் நடந்தது.விழுப்புரத்தில் வங்கி தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பீமநாயக்கன் தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நுழைவுத் தேர்வு நடந்தது. 158 பேர் விண்ணப்பித்திருந்தில், 103 பேர் தேர்வு எழுதினர்.இதே போல், விழுப்புரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ரயில்வே பணியாளர் தேர்வு பயிற்சிக்காக நுழைவுத் தேர்வு நடந்தது. இதற்கு விண்ணப்பித்த 344 பேரில், 204 பேர் தேர்வு எழுதினர். காலை 10:00 மணிக்கு துவங்கி 11:00 மணி வரை தேர்வு நடந்தது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, விரைவில், சென்னையில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்