உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மழையால் பாதித்த பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் மனு

மழையால் பாதித்த பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் மனு

விழுப்புரம்: மழையால் பாதித்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:தமிழகத்தில் சில ஆண்டுகளாக பருவம் தவறி பெய்யும் மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் திடீர் வெள்ளம், கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் பல இடங்களில் ஆறுகள் கழிவுநீர் ஓடைகளாக மாற்றப்பட்டு வருகிறது. விவசாயத்தை பாதுகாத்திட, தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை