உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீ விபத்தால் பாதிப்பு: அரசு நிவாரண உதவி

தீ விபத்தால் பாதிப்பு: அரசு நிவாரண உதவி

விக்கிரவாண்டி: தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.விக்கிரவாண்டி பட்டித்தெருவைச் சேர்ந்த சாந்தி, 55; ரம்யா, 30; ஆகியோரது வீடுகள் கடந்த 2ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமானது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வருவாய்த் துறை சார்பில் அரசு நிவாரண தொகையாக 5,000 ரூபாய், அரிசி ஆகியவற்றை தாசில்தார் யுவராஜ் வழங்கினார். வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், வி.ஏ.ஓ.,க்கள் சீனுவாசன், அண்ணாமலை, தி.மு.க., நகர செயலாளர் நைனாமுகமது உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்