| ADDED : ஜூன் 16, 2024 10:29 PM
விழுப்புரம் : விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில், தீயணைப்புத் துறை சார்பில், தீ தடுப்பு ஒத்திகை மற்றும் அடிப்படை தீயணைப்பு பயிற்சி நடந்தது.விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், விழுப்புரம் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் சிவசங்கரன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர் கள், தீ தடுப்பு ஒத் திகையில் ஈடுபட்டனர்.நிகழ்ச்சியில், திடீரென வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டால், தீயை தடுக்கும் முறைகள், பாதுகாப்பாக அறைகளில் இருந்து ஊழியர்கள் வெளியேறுவதும், பிறரை காப்பாற்றுவது குறித்தும், தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். தொடர்ந்து, நீதிமன்ற ஊழியர்களுக்கு அடிப்படை தீயணைப்பு பயற்சி வகுப்பு நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி பூர்ணிமா, நீதிபதிகள் பாக்கிய ஜோதி, இளவரசன், வினோதா, புஷ்பராணி, தமிழ்ச்செல்வன், முருகன் உள்ளிட்ட நீதிபதிகள், அலு வலர்கள், ஊழியர்கள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.