உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சேலையில் தீ: மூதாட்டி பலி

சேலையில் தீ: மூதாட்டி பலி

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே வீட்டில் குப்பையை தீ வைத்து கொளுத்திய போது சேலையில் தீ பிடித்து காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாவாடை மனைவி லட்சுமி, 90; நேற்று முன்தினம் காலை 9:30 மணியளவில், இவரது வீட்டில் குப்பையை கூட்டி தீ வைத்து கொளுத்தினார்.அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்து எரிந்து உடல் முழுதும் பரவியது. உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ