உள்ளூர் செய்திகள்

தீமிதி திருவிழா

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த திருமுண்டீச்சரம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 16 நாட்கள் தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலா நடந்தது. 16ம் நாள் நேற்று முன்தினம் தீ மிதி திருவிழா நடந்தது.அதனையொட்டி காலை 9:00 மணிக்கு அரவாண், வீரபத்திரன் சுவாமி வீதியுலாவும், 10:00 மணிக்கு அரவான் சிரசு ஏற்றும் நிகழ்ச்சியும், அரவாண் களப்பலியும், 11:00 மணிமுதல் 1:00 மணிவரை மகாபாரத பஞ்சபாண்டவர்கள் கதையை மையமாக கொண்ட மாடு வளைத்தல், கோட்டை இடித்தல் நடந்தது.தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு திமீதி திருவிழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ