உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கார் மோதி மீன் வியாபாரி பலி

கார் மோதி மீன் வியாபாரி பலி

மரக்காணம் : பைக்கில் சென்ற மீன் வியாபாரி கார் மோதி இறந்தார்.திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 55; மீன் வியாபாரி நேற்று காலை 11:00 மணிக்கு அனுமந்தை குப்பத்தில் இருந்து மீன் வாங்கிக் கொண்டு, திண்டிவனத்திற்கு புறப்பட்டார். மரக்காணம் அருகே வந்தபோது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் மோதியது. இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.விபத்து குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ