உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டாடா ஏஸ், லாரி மோதல்  நான்கு பேர் காயம் 

டாடா ஏஸ், லாரி மோதல்  நான்கு பேர் காயம் 

விழுப்புரம், : விழுப்புரத்தில் டாடா ஏஸ் வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அருகே மாரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி,45; இவர், நேற்று முன்தினம் தனது டாடா ஏஸ் வாகனத்தில், அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் முத்துவேல்,47; ஏழுமலை,40; பரசுராமன்,50; ஆகியோரோடு, விழுப்புரத்தில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் சாலையில் சென்றார். விழுப்புரம் அரசு ஊழியர் நகர் அருகே சென்ற போது, பின்னால் வந்த லாரி திடீரென டாடா ஏஸ் மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த தண்டபாணி உட்பட நால்வரையும் அங்கிருந்த சிலர் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து லாரி டிரைவரான மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த சரத்குமார்,28; என்பவர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ